அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்று அனைத்து வசதிகளும் நிறைந்த நகரத்தை விட்டு, பெற்றோரை உடன்பிறந்தோரைப் பிரிந்து, எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு, ஆசியநாட்டுக்கு வருகை தந்து சேவையாற்றிய அமெரிக்க மருத்துவ மிசனரியினரது பணி போற்றுதற்குரியது.
மருத்துவர் ஸ்கடர், திருமதி ஸ்கடர் மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் இறையன்பின் நிமித்தம் எதிர்கொண்டனர்.
மருத்துவர் ஸ்கடர் பண்டத்தரிப்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளுக்கும் தீவுகளுக்கும் மருந்துகளையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்று நோய்களைக் குணப்படுத்தினார்.
நவீன போக்குவரத்து சாதனங்கள் எவையுமே அறிமுகமாகாத காலத்தில், பாதைகள் அமைக்கப்படாத இடங்களுக்கு குதிரை வண்டியிலும் நடந்து சென்றுமே சிகிச்சையளித்தார்.