அழிந்துவரும் மரபுரிமைச் சின்னங்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை

எழுநா

Jan 29 2021 • 7 mins

நவீன யாழ்ப்பாண நகரம் 400 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய யாழ்ப்பாண நகருக்குள் இருக்கக்கூடிய பல இடங்களில் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித நடவடிக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சில வரலாற்றாளர்களின் கருத்துப்படி நல்லூர் இற்றைக்கு ஏறத்தாழ 750 ஆண்டுகள் முன்பிருந்தே யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக விளங்கியுள்ளது. அண்மையில் கிடைத்த அகழ்வாய்வுச் சான்றுகளின் அடிப்படையில், இன்றைய யாழ் கோட்டைப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன் கூடிய துறைமுகமும், நகரமும் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் வரலாற்றாளர்கள் சிலர் முன்வைத்துள்ளனர், ஆனாலும், இந்தப் பழமையை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களோ வேறு அமைப்புக்களோ, அழிபாடுகளாகக்கூட யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இல்லை.  யாழ்ப்பாண நகரப் பகுதியின் வரலாற்றுக்குச் சான்றாக அமையக்கூடியதாக இன்று எஞ்சியுள்ள கட்டிடச் சான்றுகள் ஏறத்தாழ எல்லாமே போர்த்துக்கேயர் காலத்துக்கும் அதற்குப் பிந்திய காலத்துக்கும் உரியவை. மிகப் பெரும்பாலானவை, போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிற்பட்டவை. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை எனினும், இவையும் நமது மரபுரிமைச் சின்னங்களே.  நமது வரலாற்றைக் கட்டமைப்பதில் இவற்றுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

You Might Like

Stuff You Should Know
Stuff You Should Know
iHeartPodcasts
This American Life
This American Life
This American Life
The Record Room
The Record Room
Jaden Green
Freakonomics Radio
Freakonomics Radio
Freakonomics Radio + Stitcher
Criminal
Criminal
Vox Media Podcast Network
The Why Files: Operation Podcast
The Why Files: Operation Podcast
The Why Files: Operation Podcast
The Ezra Klein Show
The Ezra Klein Show
New York Times Opinion
The Way I Heard It with Mike Rowe
The Way I Heard It with Mike Rowe
The Way I Heard It with Mike Rowe
We Can Do Hard Things
We Can Do Hard Things
Glennon Doyle and Audacy
Shawn Ryan Show
Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
Radio Rental
Radio Rental
Tenderfoot TV & Audacy
Am I the Jerk?
Am I the Jerk?
youtube.com/amithejerk
Literally! With Rob Lowe
Literally! With Rob Lowe
Stitcher & Team Coco, Rob Lowe
Behind the Bastards
Behind the Bastards
Cool Zone Media and iHeartPodcasts
The Beat Drop
The Beat Drop
Tyrell Scott