சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன.
அரிசிக்கூழானது பித்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்நிலைகளையும், தலையில் நீர் கோர்த்து ஏற்படும் உபத்திரவங்களையும் மாற்றும்.
புளிச்சாதம் உண்டால் மேக ரோகங்கள் இல்லாது போகும். ஆனால் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது வயிற்றுப்புண், பீனிசம் என்பவற்றை உருவாக்கும். மேக ரோகம் என்பது அனுசேபத் தொழிற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது தொற்றுக்களால் சிறுநீரில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
வேகவைத்த சோற்றினை நீண்டதூரப் பயணத்தின்போது பழுதாகாமல் இருக்க தமிழர்கள் உப்பு, புளி ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டனர். தூர இடங்களுக்கு கட்டிக் கொண்டு செல்வதால் கட்டுச்சோறு என்றும் புளியைப் பயன்படுத்துவதால் புளிச்சாதம் என்றும் இது அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் யாரேனும் நோய்வாய்ப்படும்போது இலகுவாகச் சமிபாடு அடையக்கூடியதும் தேவையான சக்தியை வழங்கக்கூடியதுமாக இடியப்பமே வழங்கப்பட்டு வருகின்றது. மெல்லிய இழைகளாகவும், நீர்ச்சத்தையும் அதிகமாகக் கொண்டதாக காணப்படுவதால் விரைவாகச் சமிபாடு அடையக்கூடியதாக இடியப்பம் காணப்படுகின்றது
#ayurveda #ayurvedalifestyle #health #ayurvedic #healthylifestyle #ayurvedalife #wellness #ayurvedaeveryday #ayurvedicmedicine #natural #meditation #healthyfood #vegan #organic #fitness #ayurvedafood #சித்தமருத்துவம் #சித்தர்கள் #தற்சார்பு