உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜபக்சாக்களும் | வீரகத்தி தனபாலசிங்கம்

எழுநா

Nov 27 2023 • 9 mins

ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா குமாரதுங்க பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கான அரச நிலத்தை தனியார் கோல்ஃப் மைதானத்துக்கு வழங்குவதற்கு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக ஓய்வுபெற்ற இரு அரசாங்க அலுவலர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டது.
பாதுகாப்பு விவகாரங்களை சரியாகக் கையாளாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவர் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்துக்கோடி ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு கடந்த ஜனவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகமிழைத்ததாகவும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறியதாகவும் ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிகளாகக் கண்ட உயர்நீதிமன்றம் இழப்பீடு எதையும் வழங்கவேண்டும் என்று உத்தரவிடவில்லை.
பதிலாக அவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்த நால்வருக்கும் தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை வழக்கு செலவுத்தொகையாக செலுத்துமாறு ராஜபக்சாக்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் சிவில் சமூகங்களிடமிருந்து  கோரிக்கைகள் கிளம்பத் தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
பொருளாதாரக் குற்றவாளிகளின் குடியியல் உரிமைகளை பறிப்பது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்படவேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தற்போது அதற்கு ஆதரவாக பொதுமனுவில்  மக்களிடம் கையெழுத்தைப் பெறும் இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்.

You Might Like

Stuff You Should Know
Stuff You Should Know
iHeartPodcasts
This American Life
This American Life
This American Life
Wartime Stories
Wartime Stories
Ballen Studios
Shawn Ryan Show
Shawn Ryan Show
Shawn Ryan
Freakonomics Radio
Freakonomics Radio
Freakonomics Radio + Stitcher
Criminal
Criminal
Vox Media Podcast Network
The Ezra Klein Show
The Ezra Klein Show
New York Times Opinion
So Supernatural
So Supernatural
audiochuck | Crime House
The Way I Heard It with Mike Rowe
The Way I Heard It with Mike Rowe
The Way I Heard It with Mike Rowe
The Why Files: Operation Podcast
The Why Files: Operation Podcast
The Why Files: Operation Podcast
Radio Rental
Radio Rental
Tenderfoot TV & Audacy
We Can Do Hard Things
We Can Do Hard Things
Glennon Doyle and Audacy
Behind the Bastards
Behind the Bastards
Cool Zone Media and iHeartPodcasts