Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems read less
ArtsArts

Episodes

எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3
Yesterday
எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3
எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3 Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/அதிரியன்-நினைவுகள்-குற-3/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam
4d ago
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam கலித்தேவன்- ஒரு சிறு முன்னுரை வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார். 40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர். சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" |. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23
4d ago
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" |. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார். ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/தெய்வநல்லூர்-கதைகள்-24/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com
5d ago
மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com
மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார். To read: / முழுவதும் வாசிக்க https://maalan.co.in/தோழி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
5d ago
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்வுகளில் தேறியபின், மைசூரில் திறந்த பல்கலைக்கழகத்தில் M.A, இந்தி- சம்ஸ்கிருதம் எழுதி தேர்ச்சி பெற்றார். பாகவதத்தை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். தற்சமயம் சம்ஸ்க்ருத இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/பாண-பட்டரின்-ஹர்ஷ-சரித்த/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal
1w ago
ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal
ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/கல்பகாலத்தில்-ஒரு-காதல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
1w ago
Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார். இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/துளிம-ஈர்ப்பியலை-நோக்கிய/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் |
Jan 16 2025
Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் |
Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் | காருகுறிச்சியைத் தேடி எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/இசைக்கும்-புத்தகம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3
Jan 16 2025
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/ஸ்கின்ஷிப்-பகுதி-3/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan
Jan 15 2025
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/5-இரவுநேர-யாத்திரிகன்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன்  | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin
Jan 14 2025
ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin
ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin எழுத்தாளர் ஏகாந்தன்- அறிமுகம் புதுக்கோட்டைக்காரரான எழுத்தாளர் ஏகாந்தன் பல வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பின் தற்போது டெல்லி பெங்களூர் என வசிக்கிறார். ஏகாந்தன் இளமையிலிருந்தே தமிழின் இலக்கிய எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர். தத்துவம், இலக்கியம், கிரிக்கெட், பயணம் எனப் பல்வேறு ஆர்வங்களை உடையவர். சொல்வனம், பதாகை, நவீனவிருட்சம் என கலை, இலக்கிய இதழ்களில் இவரது சில கட்டுரைகள், சிறுகதைகள், பலகவிதைகள் வெளிவந்துள்ளன. இவரது ஐந்து மின்னூல்கள் அமேஸான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/ரவிச்சந்திரன்-அஷ்வின்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan ஏகாந்தன் | ரவிச்சந்திரன் அஷ்வின் – சுழற்றி அடித்த கலைஞன் | Ravichandran Ashwin
Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன்
Jan 13 2025
Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன்
Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, விஷ்ணுபுரம் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/மிளகு-அத்தியாயம்-86/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட்
Jan 1 2025
சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட்
சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா - சிறு முன்னுரை எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா , An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் மேலும் இவர் தனது யூடியூப் ஒளி அலைவரிசையில் புத்தகங்கள் பற்றிய காணொளிகளை பதிவிட்டு இருக்கிறார். தனது வலைப்பதிவில் கட்டுரைகள், நூல் மதிப்புரை போன்றவற்றை எழுதியும் வருகிறார். இவர் சிறுகதைகளயும் இதழ்களில் எழுதி வருகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan